ppp

Advertisment

பெரம்பலூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் சுய உதவிக்குழு பெண்களிடம் மற்றும் மாவட்டத்தில் கல் குவாரிகளில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள், நடைபாதை கடை வைத்துள்ள சிறு வணிகர்கள் என பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு கடன் கொடுத்துள்ளன.

ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பு இல்லாததால் வருமானமும் இல்லை. நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற சுய உதவிக்குழு பெண்கள் உட்பட அனைவரும் அவர்களிடம் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமலில் உள்ளதால் எந்த வருமானம் இன்றி தங்களது அன்றாட சாப்பாடு பிரச்சனையை தீர்ப்பது பெண்களுக்கு ஏழை எளிய மக்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது.

இந்த நிலையில் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கடன் வாங்கியதற்கான தவணையை திருப்பி செலுத்த ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளித்துள்ளது. அப்படியிருந்தும் பெரம்பலூரில் உள்ள நிதிநிறுவனங்கள் அதில் பணி செய்யும் கடன் வசூலிக்கும் ஊழியர்கள் கடன் பெற்ற சுய உதவி குழுப்பெண்களின் வீடுகளுக்கு சென்று கடனை திருப்பி செலுத்துமாறு மிரட்டி அடாவடித்தனமாக கடன் தொகை தவணையை வசூலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Advertisment

கடன் பெற்றுள்ள பெண்கள் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எங்களிடம் இருந்து கடன் தொகையை திருப்பிச் செலுத்துமாறு மிரட்டுகிறார்கள், தரக்குறைவான வார்த்தைகளை கூறி அருவருப்பான முறையில் பேசுகிறார்கள் என பெண்கள் குற்றம் சாட்டியுள்ளளனர்.

ரிசர்வ் வங்கி கடன் கட்ட அவகாசம் கொடுத்துள்ள நிலையில் இந்த நிதி நிறுவனங்களில் அடாவடித்தனத்தை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா என்று தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள பொதுமக்கள் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.