Skip to main content

பெரம்பலூரில் தேர்தல் பரபரப்பை ஆரம்பித்து வைத்த பாரிவேந்தர் ! 

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

கடந்த 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிஜேபி ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த ஐஜேகே பாரிவேந்தர் கட்சி, பாட்டாளிமக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்குள் வந்தவுடன் சென்னையில் அவர்களுடைய கட்சி அலுவலகத்தில் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். அடுத்த சில நாட்களில் நேரடியாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவர்களின் ஆதரவை தெரிவித்து கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கும்படி அறிவுறுத்தியிருந்தனர். 

 

i

 

நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஐஜேகே கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஓதுக்கப்படும் என தி.மு.க. தலைமையிடம் கீரின் சிக்னல் வந்தவுடன் உடனே முன்னாள் அமைச்சரும், திருச்சி மா.செ.வுமான கே.என்.நேருவை சென்னையில் சந்தித்து சால்வை அணிவித்து தன்னுடைய வாக்குசேகரிப்பை ஆரம்பித்தார் பாரிவேந்தர். 

 

i


பெரம்பலூர் மாவட்டம் எம்.பி. தொகுதி பெரம்பலூரை சட்டமன்ற தொகுதியை தவிற மற்ற 5 சட்டமன்றங்களும் லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை, துறையூர், திருச்சி மாவட்டத்திற்குள் வருகிறது என்பதால் திருச்சிக்கு வருகை புரிந்த வேந்தர், நேரடியாக தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திருச்சி கலை, மதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் சேரன், என கூட்டணி கட்சிகளின் முக்கிய கட்சி தலைவர்களை சூராவளி பயணமாக அனைவரின் வீட்டீற்கும் நேரடியாக சென்று சாலை அணிவித்து முதற்கட்ட பிரச்சாரத்திற்கான ஆதரவு பணியை ஆரம்பித்தார். 

 

i

 

அ.தி.மு.க. சார்பில் இன்னும் வேட்பாளர் நேர்காணல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஐஜேகே கட்சி திமுக கூட்டணியில் பெரம்பலூரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் கூடுதல் பலத்துடன் இருப்பதால் வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கையுடன் முதற்கட்ட சந்திப்பை ஆரம்பித்து பெரம்பலூர் பகுதியில் தேர்தல் பரபரப்பை ஆரம்பித்து வைத்திருக்கிறார் பாரிவேந்தர். 

 

iii


 

சார்ந்த செய்திகள்