Advertisment

பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக புகார் கூறிய வழக்கறிஞர் கைது!

பெரம்பலூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ப.அருள். நாம் தமிழர் கட்சியில் உள்ள இவர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

Advertisment

Perambalur - advocate - arul

அதில் அவர், பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வண்புனர்வை போன்று பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதில் பெரம்பலூர் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரும், பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் ஒரு போலி நிருபரும் மற்றும் இன்னும் சிலரும் குழுவாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி காம இச்சைக்கு இணங்க வைத்து அதனை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வருவது, மறுக்கும் பெண்களை வீடியோக்களை வெளியே விடுவோம் என்று மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இவர்களுடைய மிரட்டலுக்கு பயந்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்து வருகின்றனர். மேற்படி சம்பவங்கள் பெரம்பலூரில் உள்ள நட்சத்திர விடுதி உள்பட பல இடங்களில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலும், மேற்கண்ட பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை மிரட்டலில் ஈடுபட்ட மேற்கண்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பை கருதி காவல்துறை கண்காணிப்பாளர் தாமாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வக்கீல் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மேற்கண்ட புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, பாதுகாப்பு கேட்டும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்திருந்தார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்த அருள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மகளி ரணியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து வழக்கறிஞர் ப.அருளை பெரம்பலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advocate arrest arul complaint Perambalur police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe