Skip to main content

கோக், பெப்சி விற்பனை நிறுத்தம் - வணிகர் சங்கம் அதிரடி!

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உணவை பின்பற்றுவோம் என்றும்  அன்னிய பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று கூறினார்கள்.நாளைடைவில் தியேட்டர்,ஷாப்பிங் மால் என கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பெப்சி, கோக் பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது.இந்த நிலையில்  வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் அன்னிய பொருட்களான கோக், பெப்சி விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். 

 

tender coconut



விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன் இதனை தெரிவித்துள்ளார். கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு பானங்களுக்கு பதில் உள்ளூர் பானங்கள், பதநீர், இளநீர், போன்றவை விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளார். வெள்ளையன் அவர்களின் இந்த அறிவிப்புக்கு சமூக நல ஆர்வலர்கள், இளைஞர்கள்,பொது மக்கள் என பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் கொடு! - சென்னையில் கூடும் தென்னை விவசாயிகள்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Replace palm oil with coconut oil!-Chennai coconut farmers

தமிழ்நாட்டில் அதிகமாக விளையும் தேங்காய் மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. ஆனால் ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் வழங்கப்படுகிறது. ஆகவே உள்ளூர் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யவும், தேங்காய் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்களை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் வலியுறுத்தி பல வருடங்களாகத் தேங்காய் உற்பத்தி விவசாயிகள் தேங்காய் உடைப்பு போராட்டம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில்தான் இதே கோரிக்கையை வலியுறுத்தி 16 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் சென்னையில் திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக விவசாயிகளை ஒன்று திரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கீரமங்கலம் சுற்று வட்டார கிராம தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட நக்கீரர் தென்னை உற்பத்தி நிறுவனம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பிய நிலையில், நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான செல்வராஜ் கூறும்போது, நக்கீரர் பண்ணை நட்டத்தில் இயங்கவில்லை. ரூ. 50 லட்சம் நிதி ஒரு தனி நபரிடம் உள்ளது. அதில் சுமார் ரூ. 20 லட்சம் வரை கடன் உள்ளது என்றார். இந்த நிறுவனம் மீண்டும் செயல்படுவது சம்பந்தமாக ஆலோசிக்க வேண்டும் என்றனர் பல விவசாயிகள். தற்போது நக்கீரர் பண்ணை பற்றி ஆலோசிக்க வேண்டாம். சென்னை போராட்டம் முடிந்தவுடன் விரைவில் இதேபோல கூட்டம் ஏற்பாடு செய்து ஆலோசித்து மீண்டும் நிறுவனம் இயங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவானது.

Next Story

உரித்த தேங்காயை கிலோ ரூ. 50க்கு கொள்முதல் செய்! - விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Farmers are struggle by breaking coconuts buy peeled coconut Rs. 50 per kg

 

கஜா புயலின் தாக்கத்தால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் இழந்து நின்றனர். சில மாதங்கள் ஆனது இயல்பு நிலைக்குத் திரும்ப. பல மாதங்கள் ஆனது விழுந்த தென்னை மரங்களைத் தோப்புகளில் இருந்து வெட்டி அகற்ற. எஞ்சிய தென்னை மரங்களைப் பராமரிப்பதுடன் புதிய தென்னங் கன்றுகளை நட பொருளாதாரம் இல்லாமல் தவித்தனர் விவசாயிகள்.

 

நெடுவாசல் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், போர்க் கப்பலில் தென்னங் கன்றுகளைக் கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழங்குவோம் என்று சொல்லிவிட்டுப் போனதோடு சரி. தமிழ்நாடு அரசு கொடுத்த நிவாரணம் போதவில்லை என்றாலும் வட்டிக்கு கடன் வாங்கி புதிய தென்னங் கன்றுகள் நட்டனர். இந்த நேரத்தில் சில மாதங்கள் தேங்காய், கொப்பரை, தேங்காய் மட்டை, கீற்று, தேங்காய் ஓடுகள் ஓரளவு விற்பனை ஆனதால் விவசாயிகள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாகத் தேங்காய் விலை படிப்படியாகக் குறைந்து தென்னை உபபொருட்களும் விலையில்லாமல் போனதால் விவசாயிகளின் நிலை பரிதாபமானது. சில வருடங்களுக்கு முன்பு வரை ரூ. 15 வரை விற்ற தேங்காய் தற்போது ரூ. 7, 8க்கு விற்பனை ஆகிறது.

 

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் சாமி. நடராஜன் தலைமையில் பட்டுக்கோட்டை கடை வீதியில் தொடங்கி பேரணியாகச் சென்று, தேங்காய்க்கு உரிய விலை கொடு; உரித்த தேங்காய் கிலோ ரூ. 50க்கு அரசே கொள்முதல் செய்; ரேசன் கடைகளில் சமையல் எண்ணெய்யாக தேங்காய் எண்ணெய்களை வழங்கு; நெல், கரும்பு போல தேங்காய்க்கும் ஊக்கத் தொகை வழங்கு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.