நாம் ஹோட்டல்களில்,வீடுகளில் மதிய உணவின் போது பெருமளவு பயன்படுத்தப்படும் சைடிஸ்க்ளில் மிக முக்கியமான உணவு அப்பளம். தமிழகத்தில் ஒரு விருந்து நடக்கும் வீட்டில் அப்பளம் இல்லாத சாப்பாடே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அப்பளம் நம்மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் பெப்சி நிறுவனம் லேஸ் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை ஏற்கனவே விற்பனை செய்து வரும் நிலையில் விரைவில் அப்பள விற்பனையையும் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Advertisment

papad

இந்தியாவில் அதிலும் மிக முக்கியமாக தமிழகத்தில் அதிக மக்கள் விரும்பிச் சாப்பிடப்படும் அப்பளத்தை பாக்கெட்களில் அடைத்து விற்கும் முடிவை பெப்ஸி நிறுவனம் எடுத்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் சொல்லப்படுகிறது.