People's Welfare Minister M. Subramaniam met the media today

Advertisment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவிவருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15 நட்கள் விடுமுறை அறிவித்தது புதுச்சேரி அரசு. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் அதிக அளவில் காய்ச்சல் பரவுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், " தமிழ்நாட்டில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொண்டதால் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் என ஏதேனும் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம்" எனவும் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் 327 அத்தியாவசிய மருந்துகள் 3 மாத காலத்திற்கு தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன. 311 வகையான சிறப்பு மருந்துகள் மருத்துவமனைகளின் தேவைக்கேற்ப கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதால் தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்த இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு முழுவதும் அதிகமாக பேசப்படுவது காய்ச்சல். பருவமழை துவங்குவதற்கு முன்னால் காய்ச்சல் முகாம்களை கூடுதலாக நடத்துவது குறித்து நாளை ஒரே நாளில் 1000 இடங்களில் சிறப்புக் காய்ச்சல் தடுப்பு முகாம்களை நடத்த இருக்கிறோம். இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் சளி, தலைவலி, இருமல் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.