
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (11.03.2021) வெளியிடப்பட்டது.
இதில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ள வெல்லமண்டி நடராஜன், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். இரவு சுமார் 10 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
Follow Us