Skip to main content

"மக்கள் பாதுகாப்பே முக்கியம்"- ஏரிகளை பார்வையிட்ட பின் எம்.எல்.ஏ கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை முதல் கனத்த மழை வரை பெய்து வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மழை நீரால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தினமும் இரவு நேரத்தில் கனமழை பெய்வதும், பகலில் வானம் மேக மூட்டத்துடன்  உள்ளது. இரவில் பெய்யும் மழையும், பகலில் திடீர் திடீரென பெய்யும் மழையும் ஏரி, குளங்களை நிரப்பி வருகிறது.

 

“People's safety is important” thiruvannamalai appeal to MLA party executives who visited the lakes!

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த தொகுதி. இங்குள்ள ஏரிகள் வேக வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன. இதுப்பற்றிய தகவல் கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவும், திமுகவின் முக்கிய தலைவருமான, முன்னால் அமைச்சர் கு.பிச்சாண்டி கவனத்துக்கு கட்சியினர் கொண்டு சென்றனர். 

 

“People's safety is important” thiruvannamalai appeal to MLA party executives who visited the lakes!


அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 22ந்தேதி கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியம் பொற்குணம், கமலபுத்தூர் மற்றும் மதுரா ஆகிய பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக நிரம்பியுள்ள ஏரிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அதோடு, அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம், மழைக்காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள், ஏரிகரை ஓரங்களில் குடியிருப்பவர்களை மழைக்காலம் முடியும் வரை ஊருக்குள் வந்து பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள், அதற்கு வாய்ப்பில்லாதவர்களை இரவு நேரங்களில் கண்டிப்பாக பாதுகாப்பான இடத்தில் வந்து தங்கிக்கொள்ளச்சொல்லுங்கள் என்றுள்ளார்.

 

“People's safety is important” thiruvannamalai appeal to MLA party executives who visited the lakes!

 

அதோடு, கட்சியினரிடம், கிராமங்களில் பாதுகாப்பற்ற வீடுகளில் உள்ளவர்களை பாதுகாப்பான வீடுகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதிகளவில் மழை பெய்தால் உடனடியாக பள்ளி, சமுதாய கூடங்களில் தஞ்சமடையச்சொல்லுங்கள். ஏதாவது தேவையென்றால் உடனடியாக தகவல் சொல்லுங்கள் அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்கச்சொல்கிறேன். மக்கள் பாதுகாப்பு தான் நமக்கு முக்கியம். அதனால் கட்சி தொண்டர்கள், அதில் கவனமாக இருங்கள் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார் என்கிறார்கள் அவருடன் சென்ற கட்சியினர். 




 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.