Advertisment

காபி தூள் இல்லமால் எப்படி காபி போடமுடியும்;பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தில் அமைச்சர் பேச்சு!!

பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக,பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது பல்லாயிர கணக்கானோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் வாயிலாகதமிழக முதல்வருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழியாக மனு கொடுக்கவிருக்கிறது பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு. இன்று (21-12-2018) தற்போது நடந்து கொண்டிருக்கும்இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முழு கடை அடைப்பு செய்கிறது சிவகாசி வர்த்தகர்கள் சங்கம்.

Advertisment

protest

‘பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்ட விதியை மாற்றி, புதிய விதியை ஏற்படுத்தும் அதிகாரம், அரசியல் சாசனத்தில் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்படவில்லை.’ என்பதைச் சுட்டிக்காட்டி, ‘பசுமைப் பட்டாசுகள் அல்லது குறைவான மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட வேண்டும்; விற்பனை செய்யப்பட வேண்டும்.’ என்ற உத்தரவானது, ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் முடக்கிப்போட்டு, சிவகாசியில் அனைத்துப் பட்டாசு ஆலைகளையும் மூட வைத்துவிட்டது. தமிழக அரசு, பட்டாசுக்குத் தனிப்பட்ட விலக்களிப்பதற்கு மத்திய அரசினை வலியுறுத்தித் தீர்வு காண வேண்டும். அதற்கான வரைவினை தமிழக சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே போராட்டக் குழுவின் கோரிக்கையாக உள்ளது.

protest

Advertisment

விருதுநகரில் உள்ள 1070 பாட்டாசு ஆலைகளிலிருந்தும் பேருந்துகள் மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் எனபல்லாயிரக்கணக்கானமக்கள் குவிந்துள்ளனர். கடந்த நவம்பர் 13 ஆம் தேதியிலிருந்து பட்டாசு ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. பட்டாசு தொழிலையே நம்பியிருந்தமக்கள் வேலையிழந்ததால் உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.வேறு வேலைக்கும் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.பேரியம் நைட்ரேட் எனப்படும் பச்சை உப்பு இல்லாத பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் ஒளி செறிவை வெளிப்படுத்தும் பேரியம் நைட்ரேட் இல்லாமால் எப்படி பட்டாசு தயாரிக்க முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

protest

இந்த சூழலில் இந்த போராட்டமானது இந்திய அளவிற்கு கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என லட்சம் பேரை திரட்ட வேண்டும் என முடிவெடுத்த போராட்ட குழு, மக்களை திரட்டி இந்த மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. தற்போதுபெரும் மக்கள் போராட்டமாக இந்த போராட்டம்மாறியுள்ளது. இந்நிலையில் போராட்ட களத்தில் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தஅமைச்சர் ராஜேந்திர பேசுகையில், நானும் ஒரு தொழிலாளிதான், சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலை முதல் பிரின்டிங் தொழிற்சாலை வரை அனைத்திலும் வேலை செய்துள்ளேன். உங்களின் நிலை எனக்கு தெரியும்.காபி தூள் இல்லாமல் எப்படி காபி போட முடியும். முடியாது அதேபோல் பேரியம் நைட்ரேட் இல்லாமல் எப்படி பட்டாசு தயாரிக்க முடியும்.சில விஷயங்கள் இருக்கு ஆனால் அவைகளை மீடியா முன்பு சொல்லமுடியாது (பண பேரமாக இருக்குமோ) சட்ட விவகாரங்கள் இருக்கு அதை பொதுவெளியில் பேசக்கூடாது.ஆனால் இது சம்பந்தமாக முயற்சிகள் எடுத்து பட்டாசு ஆலைகளை கூடிய விரைவில்திறந்தே தீருவோம் என கூறினார்.

protest

தோழர் நல்லக்கண்ணு, காங்கிரசை சேர்ந்த ராஜா சொக்கன் மற்றும் பல கட்சிகளைசேர்ந்தவர்களும் மக்கள் போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். இதுபற்றி தோழர் நல்லகண்ணு கூறும்போது, நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை திறக்கபோகும் அரசுஏன் பட்டாசு ஆலைகளை மட்டும் நசுக்குகிறார்கள் என கூறினார்.

போராட்டத்தில் இறங்கியுள்ள பாட்டசு தொழிலாளியான சவுந்தரபாண்டியன் என்பவர் கூறுகையில், சாப்பாட்டிற்கே நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். இந்த தொழில் போனால் அடுத்தவனிடன் பணத்தை புடுங்க வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது. பட்டாசு தொழில் இல்லாமல் இங்கு ஒன்றும் இல்லை. அச்சு தொழில் கூட பட்டாசு ஆலையை நம்பிதான் இருக்கிறது. வெளியூருக்கு சென்று வேலைபார்க்க எல்லாராலும் முடியாது. தற்போது இங்கு தொழில் இன்றி வாடும் யாராவது வழிப்பறியில் ஈடுபட்டால் ஒட்டுமொத்த களங்கமும் சிவகாசிக்குத்தான். அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உலகமே வியந்து பார்த்த சிவகாசி இன்று ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது என கூறினார்.

protest

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் தேனி வசந்தன் அமைச்சர் உரையாற்றிய பிறகு மைக்கை பிடித்து மக்கள் முன்பேசுகையில், ஆளும் மத்திய,மாநில அரசுகளுக்கு முன்னவே தெரியாதா? மக்கள் 45 நாட்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள் என பேச ஆரம்பிக்கஅமைச்சருடன் வந்த சிலர் அரசியல் பேச வேண்டாம் எனக் கூறி அவரை அமர வைத்தனர்.

protest

தற்போது போராட்டத்தில் குவியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களை களைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.சம்பந்தமில்லாத சில கூட்டமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக உளவுத்துறை சந்தேகிக்க, பிரச்சனை வரக்கூடாது என போலீசார் மக்களை, குறிப்பாக பெண்களை களைந்துபோக அறிவுறுத்தியுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் ஆலைகள் திறக்கப்பட பேச்சுவார்த்தை நடந்து வருவதால் மக்களை களைய சொல்லி போராட்ட குழு கூறிய நிலையிலும் மக்கள் தொடர் போராட்டத்தில் உள்ளனர்.

collector office protest crackers Sivakasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe