Advertisment

கீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி!! நடிகை ஸ்ரீபிரியா அதிர்ச்சி!!

s

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் மக்கள் நீதி மையத்தின் கொடியேற்று விழாவிற்கு வந்திருந்த தென்மண்டல பொறுப்பாளர் ஸ்ரீப்ரியா மீது கொடி அவிழ்ந்து விழுந்ததால் அதிர்ச்சியடைந்தார். பின்னர் காத்திருந்து கொடி ஏற்றினார்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மக்கள் நீதி மையத்தின் புதிய கிளைக்காக கொடி ஏற்றி வைக்க ஒன்றிய பொறுப்பாளர் மனோதிபன் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் செந்தில் ராஜசேகர் முன்னிலையில் தென்மண்டல பொறுப்பாளர்கள் நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் விழாவிற்கு வந்தனர்.

Advertisment

s

இப்படி வந்த நடிகை ஸ்ரீபிரியாவுக்கு பட்டாசு கொழுத்தி வெடி வெடித்து கட்சிகாரர்கள் வரவேற்றனர். அதன்பின் கொடியேற்றுவதற்காக நடிகை ஸ்ரீபிரியாவை அழைத்துச் சென்றனர். அப்போது கொடியேற்ற கயிற்றை அவிழ்த்து ஏற்றும் போது பாதியில் கொடி கயிற்றுடன் மொத்தமாக அவிழ்ந்து ஸ்ரீபிரியாவின் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ஸ்ரீபிரியா எவ்வளவு நேரம் ஆனாலும் கொடியேற்றி விட்டுத்தான் செல்வேன். உடனடியாக கொடியை மீண்டும் ரெடி பண்ண சொல்லிவிட்டு டீ கடையில் அமர்ந்திருந்தார். உடனடியாக கவிஞர் சினேகன் உதவியுடன் ஸ்பானரைக் கொண்டு கொடிக்கம்பத்தை முழுவதுமாக கழற்றி எடுத்து மீண்டும் கொடியினைக் கட்டி கம்பத்தை நட்டனர். அதன் பின் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஸ்ரீபிரியா கொடியேற்றினார்.

பின்னர் பேசிய நடிகை ஸ்ரீபிரியாவோ... தேர்தல் நேரத்தில் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். புதிய ஆட்சி மலர மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் நீதி மையத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

அதன் பின் அருகேயுள்ள கோவில்பட்டிக்கு சென்று கொடி யேற்றினார். அப்பொழுது சுமார்300க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து நடிகை ஸ்ரீபிரியாவை வரவேற்றனர். அதன்பின் அங்கேயும் மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றி வைத்து விட்டு புறப்பட்டார்.

Makkal needhi maiam sripriya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe