Skip to main content

தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட கிராம மக்கள்

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
water



பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அந்தூர் கிராமத்தில் 45 நாட்களாக தண்ணீர் வராமல் மக்கள் தவித்து வருகிறார்கள். 

 

 அந்தூர் கிராம மக்கள் தினந்தோறும் தங்களின் தேவைகளுக்காக தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மேலும் துணி துவைக்கவும் குளிக்கவும் குன்னத்தில் உள்ள ஏரிகளுக்கு சென்று வருகிறார்கள். பஞ்சாயத்து மூலம் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு 5 குடம் தண்ணீர் வழங்குகிறார்கள்.

 

இவர்களின் இந்த செயலினை பார்க்கும் பொழுது இன்னும் மக்களுக்கு சிரமமாக தான் உள்ளது. குழாயில் தண்ணீர் வர விரைவாக ஏற்பாடு செய்யாமல் வண்டியின் மூலமாக இத்தனை நாட்களாக ஐந்து குடம் தண்ணீர் மட்டும் கொடுத்து மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள்.
 

 இந்த நிலை தீபாவளிக்கு முன்னாடி இருந்து இன்று வரை தொடருகிறது. அந்தூரில் உள்ள குளங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
 

வாய்க்கால் சுத்தம் செய்யாமல் உள்ளதால் குளங்கள் நீர் வரத்து பாதிக்கப்படுகிறது. இந்த நிலை தொடருவதால் அந்தூர் கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.
 

  

சார்ந்த செய்திகள்