இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுபடுத்த இந்தியாவின் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கும் அமலில் உள்ளது.அதேவேளையில் பொதுமக்களின் அசாதரண போக்கால் ஆங்காங்கே மாநகராட்சி சார்பிலும், காவல் துறையின் சார்பிலும் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா கட்டுபாட்டின் ஒரு பகுதியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திகொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

பல நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் தெரிவித்தவர்களுக்கு நிறுவனத்தின் சார்பில்போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்து வருகின்றனர். அதே சமயம் வருகிற மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ‘கோவின்’ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி முகாமில் ஊசி போட மக்கள் காத்திருந்தனர்.