Advertisment

அரசின் உத்தரவு மீறல்; அமரர் ஊர்தியில் அட்டகாசம்!

People who sold liquor in violation of government orders in trichy

நேற்றைய தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்களை மூடி வைக்க கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டிருந்தார்.மேலும் தனியார் ஓட்டல்களிலும் மது அருந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் திருச்சி பொன்மலை மேலகல்கண்டார்கோட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான அமரர் ஊர்தியில் வைத்து கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக தகவல் வெளியானது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் தனியார் அமரர் ஊர்தியில் மறைத்து வைத்து விற்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

liquor police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe