Advertisment

டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய மக்கள்- 16 பேர் கைது

சென்னை குரோம்பெட்டையை அடுத்ததிருநீர்மலை, இரட்டைமலைசீனிவாசன் தெருவில் புதிதாக திறக்கப்படவிருந்த அரசு மதுபான கடை அப்பகுதி பெண்கள் மற்றும் இளைஞர்களால் சூறையாடப்பட்டது.

Advertisment

கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் புதிய அரசு மதுபானக்கடை வருவதாக இருந்த செய்திகளால் அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் மதுபான கடை வேண்டாம் மீறி வைக்கப்பட்டால் அடித்து நொறுக்குவோம் என கூறிவந்தனர்.

Advertisment

shop

இந்நிலையில் இன்று காலை புதிதாக மதுபான கடைதிறக்க நேற்று இரவுமதுபான பாட்டிகள் வந்திறங்கின.இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த அனைத்து மது பாட்டில்களையும் அடித்து நொறுக்கினர்.

மேலும் வாகனத்தில் வந்திறங்கியமதுபாட்டில்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இதை தொடர்ந்து மதுக்கடை சூறையாடலில் ஈடுபட்டதாக16 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

tasamak TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe