Skip to main content

15 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு நூதன போராட்டம் நடத்தும் பொதுமக்கள்

Published on 07/10/2018 | Edited on 07/10/2018
neethi


கடலூர்  மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில்  இராஜசூடாமணி கிராமத்தின்  புதுத்தெருவில்  சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகிறார்கள். இத்தெருவில் 15 ஆண்டுகளாக சாலைவசதி இல்லாமல் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் அந்த தெருக்களில் வசிக்கும் குழந்தைகள் முதியோர்கள் ஊனமுற்றோர்கள் என நடந்து செல்லவே  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

 மேலும் வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்து விடுவதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வருவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் சாலை வசதி வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் மணு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என்பதே அப்பகுதி மக்களின் தொடர் குற்றச்சாட்டாகவே உள்ளது.

 

nel

 

இதனைதொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சேரும் சகதியுமாக உள்ள தெருவில்  நாற்று நடும் நூதனபோராட்டத்தை  நடத்தினார்கள்.  இதனையும் சம்பந்தபட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை யென்றால் அடுத்தகட்டமாக  காட்டுமன்னார்கோவில் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்