Advertisment

"யாருட்ட காசு கேக்குற?" - டாஸ்மாக்கில் ரகளை செய்த வாடிக்கையாளர்கள்!

People who made trouble Tasmac employees

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு காசு கேட்டதற்கு கடையின் உள்ளே சென்று ஊழியரை மது பாட்டிலால் இரக்கமற்ற முறையில் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சிதம்பரம் அருகே கண்ணங்குடி புறவழிச் சாலையில் அரசின் மதுபானக் கடை உள்ளது. இந்த கடையில் புதன் இரவு இரண்டு நபர்கள் மதுபானம் வாங்க வந்துள்ளனர். அப்போது பணியில் இருந்த ஊழியர்கள், மது பாட்டிலை கொடுத்துவிட்டு அவரிடம் பணத்தைக் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள்இருவரும், யாரிடம் பணம் கேட்கிறாய் என்று டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மது பாட்டிலைக் கொண்டு ஊழியரை இரக்கமற்ற முறையில் தாக்கியுள்ளனர்.

Advertisment

இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை ஆதாரமாகக்கொண்டு டாஸ்மாக் ஊழியர்கள், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் மூலம், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்திடாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துகடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தை அனைவரும் முற்றுகையிட்டனர்.

TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe