chi

சிதம்பரம் நகரையொட்டி ஓடும் வாய்கால் ஓரத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 370 குடும்பத்தினர் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். இவர்களின் வீடுகளை கடந்த மூன்று நாட்களாக பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் வாய்கால் ஆக்கிரமிப்பு என்று அவர்களது வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது. வீட்டை இழந்தவர்கள் பலர் வேறு இடத்திற்கு குடிபெயர முடியாமல் நடுத்தெருவில் அவர்களது உடமைகளை வைத்துக்கொண்டு சிரமத்தில் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் வீட்டை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று சிதம்பரம் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சிதம்பரம் கோட்டாட்சியரை சந்திக்க அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து கோட்டாட்சியர் வீடு இழந்தவர்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் மூலம் தெரிவிக்கிறேன். மேலும் இந்த பகுதியில் உள்ள அரசு நிலங்களை கணக்கெடுத்து இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்மொழியாக கூறினார். அதனை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisment