Advertisment

கழிவறைக்கு பயன்படுத்தும் நீரைக் குடிக்கும் பட்டியலின மக்கள்; கரூரில் அவலம்!

People who drink the water they have to go to the toilet karur

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் பஞ்சாயத்து ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஆறு மாத காலமாகக் குடிநீர் வழங்கப்படாததால், இன்று அவர்கள் குடிதண்ணீர் கேட்டு பஞ்சாயத்து நிர்வாகத்தைக் கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆதி திராவிடர் காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை. பலமுறை இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கைவைத்தும்நடவடிக்கை எடுக்கப்படவில்லை.மேலும் அப்பகுதி மக்கள் அருகிலுள்ள பொதுக்கழிவறையில் வரும் தண்ணீரைக் குடிக்க, சமைக்கப் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.

இதனால் இன்று காலை அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன்சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தி இரண்டு நாட்களில் குடிநீர்வழங்கநடவடிக்கைஎடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

karur water
இதையும் படியுங்கள்
Subscribe