/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_49.jpg)
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ளது நல்லூர்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும், வேலைக்குச் செல்வோர்களும் அரசுப் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்த நல்லூர்பாளைய கிராம பகுதிகளுக்கு வழித்தடம் எண் 6, 105 ஆகிய இரண்டு அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இரண்டு பேருந்துகளும்குறித்த நேரத்துக்கு இயக்கப்படாத காரணத்தால்பொதுமக்களும் மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, ஊர்மக்கள் பல முறை புகார் அளித்து வந்த நிலையில், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தாங்களே களத்தில் இறங்கலாம் என்று முடிவு செய்த கிராம மக்கள்,திங்கட்கிழமை காலை 8 மணி அளவில் பஸ் ஸ்டாப்பில் ஒன்று கூடினர்.
அப்போது, ஒரு மணி நேரம் தாமதமாக வந்த பேருந்தைதிடீரென சிறைபிடித்த கிராம மக்கள்,பள்ளி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்துசாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து, ஊர்மக்கள் பேசும்போது ''பள்ளிக்குச் செல்வதற்கு 8 மணிக்கு வரவேண்டிய பேருந்துஒரு மணி நேரம் தாமதமாகவும், மாலையில் 4 மணிக்கு வரவேண்டிய பேருந்து, ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வருகிறது. சில சமயங்களில் இந்தப் பகுதிக்குப் பேருந்துகளே வருவதில்லை'' என கிராம மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தைத்தொடர்ந்தனர். அதன்பிறகுசூலூர் கோட்ட அதிகாரிகள் மற்றும் சுல்தான்பேட்டை காவல் நிலைய போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகுபோராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)