Advertisment

பீரோவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

 people who broke the bero and looted jewelry and money

Advertisment

திருச்சி கருமண்டபம் சக்தி நகரில்வசித்து வரும் துரைராஜ் பொங்கல் விடுமுறைக்காக குடும்பத்துடன் பெரம்பலூர் சென்றிருந்தார். நேற்று இரவு 8 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம், சமையல் அறையில் வைத்திருந்த 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் அனைத்தும் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்குக் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியோடு தடயங்களைச் சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்போது காவல்துறையினர் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

police Theft trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe