Advertisment

ஆதாரத்துடன் முறையிட்ட மக்கள்! அதிகாரி உடனடி சஸ்பெண்ட்! 

People who appealed with evidence! Officer immediately suspended!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணியம் கிராமத்தில் ரோடு போடாமல் பணம் கையாடல் செய்ததாக அதிகாரிகள் மீது ஆதாரங்களுடன் கிராம மக்கள் குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்தினர்.

Advertisment

இதில் குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தில் இறந்து போனவர்களின் பெயரில் வேலை செய்ததாக பணம் கையாடல் செய்துள்ளதாக மக்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்தனர். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மோகன் உரிய விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில், தார் சாலை அமைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரம்மாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனை கண்காணிக்கத் தவறியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக வட்டார வளர்ச்சி அலுவலகம் கணினிப் பிரிவில் பணிபுரியும் ஆப்பரேட்டர் பாலு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் இன்னும் 2 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறும் சமயத்தில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்ய கூடாது என்ற காரணத்தினால் அவரை பணியிலிருந்து விடுவித்து உள்ளனர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe