
பெங்களூரில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் டீசல் லோடு ஏற்றிக்கொண்டு சென்னையில் இருக்கக்கூடிய தனியார் கம்பெனிக்கு டெலிவரி செய்வதற்காக சென்று கொண்டிருந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது வந்தபோது டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஓட்டுநரின் உறக்க கலக்கத்தில் சாலையின் நடுவே சென்ட்ரல் மீடியம் மீது வேகமாக மோதி விபத்திற்குள்ளானது.

அதில், டேங்கரில் முதல் கம்பார்ட்மெண்டில் இருந்த ஐந்தாயிரம் லிட்டர் டீசல் சாலையில் சிதறியது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வாணியம்பாடி கிரமிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவ்வழியாக வரும் வாகனங்களை பக்கத்தில் இருக்கக்கூடிய சர்வீஸ் சாலை வழியாக மாற்றுப்பாதையில் இயக்க உரிய ஏற்பாடுகளை செய்தனர். பின்பு லாரியை பாதுகாப்பாக மீட்டு சாலையின் ஓரமாக நிறுத்தி உள்ளனர். இதனால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டேங்கரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக டேங்கரிலிருந்து 5000 லிட்டர் டீசல் தொடர்ந்து சாலையில் சிதறி வீணாகி வருகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் வழுக்கி விபத்தில் சிக்காமல் தடுப்பதற்காக வாகனங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய சர்வீஸ் சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.