ஆற்றுப் பாலம் உடைந்ததால் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச் செல்லும் அவலம்

People walked through waist-deep water river bridge broke

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்தவேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் வழியில்கோமுகி ஆற்றின் குறுக்கே சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் வடக்கு பகுதியில் அடித்துச் சென்றதால் பாதி பாலம் இடிந்து விழுந்தது.

இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நல்லூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (20.10.2022) நகர் கிராமத்தைச் சேர்ந்த கார்பெண்டர் முருகேசன் (51) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.இவரது உடலை நேற்று அடக்கம் செய்ய நகர் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது கோமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் அருகே உள்ள வழியாக இடுப்பளவு தண்ணீரில் பயந்தபடியே ஆற்றை கடந்து மயானத்திற்கு சென்றனர். ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் வயதானவர்களும் குறைந்த வயது உள்ளவர்களும் ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் கரையிலேயே நின்றுவிட்டனர் .

மாவட்ட நிர்வாகம் நகர் கிராமத்திலுள்ள கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe