Advertisment

நேரம் முடிந்தும் ரெம்டெசிவிருக்காக காத்திருந்த மக்கள்... போலீசாருடன் வாக்குவாதம்!

 People waiting for Remteciver at the end of time ... Arguing with police!

தமிழகத்தில் இரண்டாம் அலைகரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை வெளியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர பரிந்துரைகின்றனர். ஒரு டோஸ் ரெம்டெசிவிர் 1,500 ரூபாய் என இருக்கும் நிலையில் கள்ளச் சந்தையில் அதன் விலை பல்லாயிரக்கணக்கில் கூடி உள்ளது.

Advertisment

கடந்த 26 ஆம் தேதிசென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்ரெம் டெசிவிர்மருந்து விற்பனை துவங்கியது. பல்வேறு மாவட்டங்களிலிருந்துரெம்டெசிவிரை வாங்க நோயாளிகளின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிகாலையிலேயே குவிந்தனர்.

Advertisment

 People waiting for Remteciver at the end of time ... Arguing with police!

இரண்டாம் நாளான நேற்றும் அதே மருத்துவமனைவளாகத்தில் மக்கள் அதிகம் குவிந்த நிலையில், கள்ளச்சந்தையில் டோக்கன்கள் விநியோக்கிப்படுவதாகஅங்கு மருந்து வாங்க குவிந்த மக்கள் குற்றம்சாட்டினர். சமூக இடைவெளியின்றி அங்கு மக்கள் ரெம்டெசிவிர் மருந்து வாங்க உயிரை பணையம்வைத்து காத்திருந்த நிலையில், மருந்துக்கான டோக்கன் கள்ளச்சந்தையில் முறைகேடாக விநியோகிப்பதாக வெளியான செய்திஅதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருந்து விநியோகம் செய்யப்படும் இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மருந்து விற்பனை செய்யும் இடம் இன்று முதல் சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்றுசென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரண்டு கவுன்ட்டர்களில்ரெம்டெசிவிர்விற்பனை செய்யப்பட்டது.

 People waiting for Remteciver at the end of time ... Arguing with police!

இதனால் இன்று காலை முதல் ரெம்டெசிவிர் மருந்து வாங்க சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி வளாகத்திலிருந்துவெளியே வரை ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனர். மருந்து விற்பனை நேரம் முடிந்தும்மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில்ரெம்டெசிவிர் வழங்கப்படாததால் அங்கிருந்தமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Chennai corona virus police Remdesivir
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe