கரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் மே 03 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 26 லிருந்து 29 வரையிலான நான்கு நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நேற்றைய (30.04.2020) தினம் முழு ஊரடங்கு முடிந்த நிலையில் எருக்கஞ்சேரி இந்தியன் வங்கியில் பணம் எடுக்கவும், செலுத்தவும் மக்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். இதனால், கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.