Advertisment

தமிழக ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணத் தொகை ரூபாய் 1,000 மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகம் தொடங்கியது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் அரிசி அட்டைகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது.

இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. சென்னை, அயனாவரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காக மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.