Advertisment

''மக்கள், வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள்''-திமுகவிற்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

'' People, voters expect '' - GK Vasan urges DMK!

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நடைபெற இருக்கின்ற நிதிநிலை அறிக்கையிலேயேஇது தொடர்பான உரிய அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று மக்கள், வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றார்கள்''என்றார்.

Advertisment

தமிழ்நாடுபட்ஜெட்டை ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மேலும்முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கான பட்ஜெட்டைஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என நிதித்துறைச் செயலாளர் தகவல் தெரிவித்திருக்கிறார். அதேபோல்காகிதமில்லாத நிதிநிலை அறிக்கைக்காக, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் சட்டமன்ற அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமரும் இருக்கைகளில் கையடக்க கணினி பொருத்தும் பணிகள் நடந்துமுடிந்துள்ளனஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

GK VASAN SPEECH TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe