Advertisment

லிஃப்ட்டில் சிக்கிய பொதுமக்கள்; பதறிய ஆட்சியர்

People trapped in the lift! Panicked collector!

Advertisment

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று தொழிலாளர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி கணேசன், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்து அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள லிஃப்டில் தரை தளத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது லிஃப்ட் தரை தளத்தில் மாட்டிக்கொண்டது. இதில் ஆறு ஆண்கள், நான்கு பெண்கள் உட்பட மொத்தம் பத்து நபர்கள் இருந்தனர். சம்பவம் அறிந்து பதறிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயற்சித்தனர்.

ஆனால், அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்படவே, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தியாணைப்புத்துறையினர் லிஃப்டில் மாட்டிக்கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிட போராட்டத்திற்கு பிறகு உள்ளே சிக்கிக் கொண்டவர்களை உயிருடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe