Advertisment

விஜயகாந்த்திற்காக அன்னதான அஞ்சலி செலுத்திய ஊர் பொதுமக்கள்    

People of the town paid tribute to Vijayakanth

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூர் கிராமத்தில்,விஜயகாந்த் மறைவையொட்டி ஊர் பொதுமக்கள் சார்பில்அன்னமிட்டவருக்கு அன்னதான அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியை முன்னிட்டு,சிறுவர் முதல் பெரியவர் வரை கட்சி பேதமின்றி சட்டையில் கருப்பு பேட்ஜ்அணிந்தும், விஜயகாந்த்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும்,மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisment

பின்னர் கோவில் முன்புஅமைக்கப்பட்டிருந்த பந்தலில்பொதுமக்களுக்கு தலைவாழை இலையுடன் உணவு பரிமாறப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கட்சி பேதமின்றி உணவு அருந்தினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள், ரசிகர்கள், இளைஞர்கள் செய்தனர்.இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment
karur vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe