Advertisment

கனிமொழியின் நூதன திட்டத்தால் நன்மை பெறும் தூத்துக்குடி மாவட்ட மக்கள்..! 

People of Thoothukudi district benefiting from Kanimozhi's innovative project

கரோனா நோயில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து, பொதுமக்களைத் தானே நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியத்தையும், பொதுமக்களுக்குத் தடுப்பூசி குறித்த அச்சத்தையும் போக்கி வருகிறார் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான எம்.பி. கனிமொழி. பொதுமக்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது தூய்மைக் காவலர் ஒருவர், “தடுப்பூசி செலுத்தி எங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் எங்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவது?” என்று கேட்க, அதற்கு கனிமொழி, “நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உங்கள் குடும்பத்தை நீங்கள் காப்பாற்றலாம்” என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

Advertisment

தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒருபுறம், மறுபுறம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில், நடமாடும் தடுப்பூசி மையம் அமைத்து நகரம் முதல் கிராமங்கள்வரை அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து, கடந்த 16/05/2021 அன்று துவக்கி வைத்திருக்கிறார் கனிமொழி.தடுப்பூசி திட்டம் சிறப்பாக செயல்பட ஊராட்சித் தலைவர்களின் பங்கும் அவசியம் என கருதிய கனிமொழி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் நேரில் சென்று ஊராட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 403 கிராம ஊராட்சிகளில் , 1,745 குக்கிராமங்கள் உள்ளன. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 நடமாடும் தடுப்பூசி குழு என மொத்தம் 36 நடமாடும் தடுப்பூசி குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் அடங்கிய நடமாடும் தடுப்பூசி குழு காலை 9 மணிமுதல் 12 மணிவரை ஒரு கிராமத்திலும், மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை ஒவ்வொரு கிராமத்திலும் என இரண்டு வேலையாக சென்று பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்திவருகிறது. தடுப்பூசிக் குழு வருகை தொடர்பாக முதல் நாளே அங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் ஆட்டோ விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் அந்தப் பகுதி ஊராட்சித் தலைவர்களும், அலுவலர்களும், பொதுமக்களுக்கு நேரில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் 21 நாட்களுக்குள் இந்த நடமாடும் தடுப்பூசி மையத்தை முடிக்க திட்டமிட்ட நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதால் தற்போது நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

கனிமொழியின் இந்த முயற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நடமாடும் தடுப்பூசி மையம் அமைத்து, அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

innovative thinking MP KANIMOZHI Tuticorin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe