Advertisment

குடியிருப்புக்கு அருகில் இருக்கும் உரக்கிடங்கு...துர்நாற்றத்தால் மக்கள் அவதி!!

"எங்கு மக்கள் வசிக்காத பகுதியில் செய்ய வேண்டியதை மக்கள் வாழும் பகுதியில் செய்யலாமா? எப்பாவது ஒரு முறை குடலை புரட்டினால் விட்டு விடலாம் இருபத்தி நாலு மணி நேரமும் மூச்சு முட்டி குடலை புரட்டினால் எப்படி வாழ்வது?" என பரிதாபத்துடன் கேட்கிறார்கள் ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள்.

Advertisment

people suffering

அவர்கள் திரண்டு வந்து ஈரோடு கலெக்டரிடம் இன்று முறை யிட்டனர். அவர்கள் கூறும்போது,

Advertisment

"ஐயா, நாங்கள் ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி வீதியில் வசித்து வருகிறோம். ஏராளமான குடும்பங்கள் வாழ்கிறோம் எங்கள் பகுதியில் குடியிருப்பு அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அந்த குப்பை கழிவுகள் அரைக்கப்பட்டு உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இது சமீப காலமாகத் தான் நடக்கிறது நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு இருக்கிறோம்

அவ்வாறு குப்பை கழிவுகளை அரைக்கும் போதுமிக கடுமையாக துர்நாற்றம் வீசுகிறது. மூச்சு முட்டி குடலை புரட்டுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசிக்கவே சிரமப்பட்டு வருகிறோம். மேலும் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த உரக் கிடங்கு அருகே ரேசன் கடை, பள்ளிக்கூடமும் உள்ளது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே பல போராட்டம் நடத்தி உள்ளோம் எதுவும் நடக்கவில்லை. தாங்கள் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு இங்கு செயல்பட்டு வரும் உரக்கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

"அரசு அலுவலகம் அங்கு இருந்தால் தான் தெரியும் அதிகாரிகள் அப்போது தான் உணர்வார்கள், என பரிதாபமாக கூறுகிறார்கள்" பெண்கள்

Residents tiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe