/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3513.jpg)
கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆலப்பாக்கம் கிராமம் அருகே மேம்பாலம் அமைத்துத்தரக்கோரி நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து, கடலூர்-சிதம்பரம் சாலையில் ஆலப்பாக்கம் என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுரங்கப்பாதை, பேருந்து நிழற்குடை, இணைப்பு சாலை வசதி செய்து தர வலியுறுத்தி வெள்ளிக்கிழமைசாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையறிந்த சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, காவல் ஆய்வாளர் வினோதா ஆகியோர் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேச்சுவார்த்தை நடத்தி சாலைமறியல் போராட்டத்தைக் கலைந்து போகச்செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)