
கடந்த ஏழு நாட்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன்எஸ்டேட்பகுதியில் வனத்துறையினருக்குப் போக்குகாட்டி வரும் டி23 புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று ஒருவரைக் கொன்றதால் புலியைச் சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று, முன்பு கொல்லப்பட்ட 3 பேரையும் அந்த புலி உணவாக உட்கொள்ளவில்லை. ஆனால் நான்காவது நபராக இன்று கொல்லப்பட்டவரைப் புலி உண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போதுஎஸ்டேட்டைஅச்சுறுத்தி வரும் புலிக்கு வயது 13. மேலும் உடலில் காயங்களோடு இந்த புலி சுற்றி வருவதால் ஆட்கொல்லி புலியாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வண்டலூர் பூங்காவிற்குக்கொண்டுசென்று பராமரிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த வனத்துறையின் முயற்சி தோல்வியில் முடிய, நேற்று 'டி23' ஐ சுட்டுக்கொல்ல வனத்துறையின் முதன்மை வனத்துறை அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார்.

ஏற்கனவே அந்தபுலியைப்பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நான்காவது நபராக ஒருவரை நேற்று புலி கொன்றது அங்கு மேலும் பரபரப்பையும் அச்சத்தையும்ஏற்படுத்தியது.அதனைத்தொடர்ந்துமசினகுடியில்புலி தாக்கி இறந்த நான்காவதுநபரின்உடலுடன்இன்றுஅவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிரேதப்பரிசோதனைக்குப்பிறகு இன்று உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து வீட்டில் சடங்குகள் நடந்த பிறகு சடலத்தை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது திடீரெனஉடலைசாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைபோலீசார்சமாதானப்படுத்தும்முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போதுபோலீஸாரிடம்வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள், ''புலியைச்சுட்டுப்பிடிப்பதாக நேற்று மாலை அதிகாரிகள் எங்களுக்கு உறுதியளித்தார்கள். அதன் அடிப்படையிலேயே நாங்கள்உடலைப்பிரேதப்பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல ஒத்துக் கொண்டோம். ஆனால் தற்போது வரைபுலியைச்சுட்டுப்பிடிக்க வில்லை. மயக்க ஊசிசெலுத்திப்பிடிப்பதற்கான முயற்சி மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவேபுலியைச்சுட்டுப்பிடிக்கும் வரை நாங்கள் உடலை அடக்கம் செய்ய மாட்டோம்'' எனப்போராட்டத்தில் ஈடுபட்டனர். புலி விரைவில்சுட்டுப்பிடிக்கப்படும் எனபோலீசார்தரப்பில் உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல்போராட்டத்தைக்கைவிட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்இறந்தவரின் உடலை அடக்கம்செய்யப்புறப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)