Skip to main content

வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்.. விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை! (படங்கள்)

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

தமிழ்நாட்டில் பரவலாகப் பல மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாகத் தொடர் மழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று முன் தினம் இரவு பெய்த பலத்த மழையால் முக்கியச் சாலைகள் உட்பட பல்வேறு பகுதிகளின் உட்புற சாலைகளும் வெள்ளக்காடானது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை காலை வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார். மேலும், வெள்ள நீரை வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

அதிகாரிகளின் நடவடிக்கையாலும், மழை சற்று ஓய்ந்ததாலும், பல்வேறு இடங்களில் தேங்கிய மழை நீர் வடியத்துவங்கியது. ஆனால், இன்னும் இரண்டாவது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், சென்னை, வில்லிவாக்கம், பாபா நகர் பகுதியில் அனைத்து தெருக்களும் வெள்ளத்தால் மூழ்கி உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நகரில் மழை நீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கின்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பாஜக பெண் நிர்வாகி கைது!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
BJP chennai woman executive incident 

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் வீதிமீறல்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கத்தில் வீட்டின் உரிமையாளர் பெயரில் போலி ஆவணம் சமர்ப்பித்து பாஜக சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவரை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவரது கைதை தொடர்ந்து பாஜக மண்டல தலைவர் மருதுபாண்டி வீட்டில் போலீசார் இன்று (09.04.2024) காலை 07.00 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

டிபன் பாக்ஸில் வெடிகுண்டு; வில்லிவாக்கத்தில் பரபரப்பு 

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Bomb in Tiffin Box; incident in villivakkam

 

அண்மையில் கேரளாவில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலத்தில் வெடிகுண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், டிபன் பாக்ஸில் வெடிகுண்டை கொண்டு வந்து ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதேபோல் சென்னையிலும் டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நபர் ஒருவர் பொது இடத்தில் கத்தியுடன் சுற்றிவந்து அச்சுறுத்தல் கொடுப்பதாக சென்னை வில்லிவாக்கம் காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் பொதுமக்கள் தொலைப்பேசி மூலமாகப் புகார் ஒன்று கொடுத்திருந்தனர். அதனடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கார்த்திக் என்ற நபரைப் பிடித்தனர். அவருடைய வீட்டில் சோதனை நடத்தியபோது வீட்டிலிருந்த டிபன் பாக்ஸ் ஒன்றை போலீசார் திறந்து பார்க்க முயன்றனர். அப்பொழுது கார்த்திக் அதில் நாட்டு வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் பதறியதை வைத்து கார்த்திக் போலீசார் பிடியிலிருந்து தப்பிச் சென்றார்.

 

அதனைத் தொடர்ந்து நேற்று காலை போலீசார் மீண்டும் அதே வீட்டில் சோதனை செய்த பொழுது இரண்டு டிபன் பாக்ஸ்களில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார்த்திக்கை போலீசார்  கைது செய்தனர். விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (27) மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. எதிரிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி வில்லிவாக்கம் பகுதியில் தங்கி வந்துள்ளார். எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக்கிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் குறித்து வெடிகுண்டு நிபுணர்களை வைத்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.