publive-image

Advertisment

திருச்சி மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது, “கரோனா பெருந்தொற்று சமூகப் பரவலைத் தடுத்திடும் நடவடிக்கையாக நாளை (6.10.2021) புதன்கிழமை மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மக்கள் கூடி திதி கொடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுகிறது.

மேலும் காவிரி ஆற்றின் அனைத்து கரைப் பகுதிகளிலும் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்த்து கரோனா பரவலைத் தடுத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்தார்.