Advertisment

''அரசின் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்''-கரோனா நிலவரம் குறித்து முதல்வர் அறிவுரை!

corona

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,859 பேருக்கு கரோனாசெய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை என்பது 25,55,664 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 68 நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 103 ஆக பாதிப்பு அதிகரித்தது.அதேபோல் நேற்று சென்னையில் மேலும் 181 பேருக்கு கரோனா உறுதியாகியது. சென்னையில் ஏற்கனவே நேற்று முன்தினம் 164 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று3வது நாளாக சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. அண்டை மாநிலமான கேரளாவில் கரோனாதொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு கேரளாவிற்குகுழு ஒன்றையே அனுப்பியுள்ளது.

Advertisment

இந்நிலையில் மேலும் ஒருவாரம்(அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை)தற்பொழுதுள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கைநீடிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக எந்த தளர்வுகளும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் மக்கள் அதிகம் கூடுவதாக தெரிந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசார் அந்த பகுதியை மக்கள் நலன் கருதி அடைக்க நடவடிக்கைமேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் சில அறிவுறுத்தல்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். அதில், ''கரோனாமூன்றாம் அலை குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலையை தடுக்க அவசியமின்றி மக்கள் வெளியே வரவேண்டாம். வருமுன் காத்தலே விவேகம்,இதுநாம்பொறுப்புடன் இருக்கவேண்டியநேரம். மூன்றாவது அலை தமிழகத்தில் ஏற்படவே முடியாத வகையில் முகக்கவசம், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

corona virus stalin Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe