Skip to main content

வினோத விளம்பரத்தால் அதிர்ந்த மக்கள்; உதவி மின் பொறியாளர் பணியிடை நீக்கம்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

nn

 

திருவாரூரில் மின் கணக்கெடுப்பு செய்ய ஆளில்லாததால் ஜூன் மாதம் கட்டிய அதே மின்கட்டணத்தை இந்த மாதம் கட்டி விடுங்கள் என வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. சாத்தனூர், சித்தாம்பூர், வேல்குடி, பழையனூர் ஆகிய கிராமங்களுக்கு வடபாதிமங்கலத்தில் மின் பொறியாளர் அலுவலகம் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இங்கு மின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஆள் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் கடந்த ஆறாவது மாதம் (ஜூன்) கட்டிய மின் கட்டணத்தை இந்த மாதம் கட்டி விடுங்கள் என தினசரி பத்திரிகைகளில் வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிவிப்பில், ‘மின் கணக்கீடு செய்ய ஆள் இல்லை. அதனால் ஆறாம் மாதம் கட்டணத்தை செலுத்துங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே, ஜூன் மாதங்கள் கோடைக் காலம் என்பதாலும் பள்ளி விடுமுறைக் காலம் என்பதாலும் அதிகப்படியான மின் சாதனங்கள் இயக்கப்பட்டிருக்கும். இதனால் அதற்கான மின் கட்டணம் வந்திருக்கும். ஆனால் இப்பொழுது மின்சாரத்தின் பயன்பாடு ஓரளவு குறைந்திருக்கும். இதனால் ஆறாம் மாதத்திற்கான மின் கட்டணத்தை விட இந்த மாதம் மின் கட்டணம் கணக்கிடப்பட்டிருந்தால் குறைவாகத்தான் வந்திருக்கும். ஆனால் பழைய மின்கட்டணத்தையே கட்டச் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதுகுறித்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பிரேம்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.