People shocked by stinking sack

Advertisment

விழுப்புரம் அருகில் உள்ள விரட்டிகுப்பம் என்ற ஊரின் சுடுகாடு அருகே ஒரு சாக்கு மூட்டை கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே அந்த மூட்டை அங்கு கிடப்பதாகவும் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி உள்ளனர்.

இந்தத் தகவல் பரவியதும், 'யாரோ மனிதரைக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டைக்குள் கட்டிக் கொண்டு வந்து இங்கு வீசி விட்டுப்போயிருக்கிறார்கள், முட்டைக்குள் கட்டப்பட்டிருப்பது மனித உடல்தான்' என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. இதை வேடிக்கைப் பார்க்க பொதுமக்கள் கூடிவிட்டனர். உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் உடனடியாக சுடுகாட்டுக்கு விரைந்துசென்றனர். அவர்கள் முகத்தை மூடியபடி சாக்கு மூட்டையை எச்சரிக்கையுடன் பிரித்து பார்த்தபோது அந்த மூட்டைக்குள் அழுகிய நிலையில் நாயின் உடல் வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு மனித உடல்தான் என்று அதிர்ச்சியுடன் காத்திருந்த பொதுமக்கள் 'அட.. ச்சீ... நாயா ?'என்று அலுப்புடன் பேசியபடி கலைந்து சென்றனர்.