Advertisment

தம்பிதுரையை திருப்பி அனுப்பிய மக்கள்

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது குடிநீர் கேட்டு பொதுமக்கள் இரவிலும் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை திரும்பி சென்றார்.

Advertisment

People sent back thampidurai

Advertisment

குளத்தூர் அருகே உள்ள அந்தோணியார் கோவில் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் கிடைக்கவில்லை. குடிதண்ணீர் வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது . இதனால் விரக்தி அடைந்த பொதுமக்கள் இரவு குளத்தூர் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக வேனில் வந்த கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை வாக்கு சேகரிக்காமல் திரும்பி சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து போகச் செய்தனர்.

election campaign thampidurai
இதையும் படியுங்கள்
Subscribe