people say edappadi palanisami government is best says Rajendra Balaji

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்டம் - சிவகாசி சட்டமன்றத்தொகுதி கட்சி சார்பில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசினார்.

Advertisment

அதில், “மத்தியில் அதிமுக கரம் ஓங்க வேண்டுமென்றால்;மத்தியில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமென்றால்;சிறுபான்மை மக்களுக்கு எல்லா உதவிகளும் கிடைக்க வேண்டுமென்றால்;பெரும்பான்மை மக்களுடன் சிறுபான்மைமக்கள் ஒன்றாக இணைந்து வாழ வேண்டுமென்றால்;வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இ.பி.எஸ். நிறுத்தும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

Advertisment

அதிமுக இளைஞர்கள் கூட்டம் வீறுகொண்டுஎழுந்துள்ளது. தமிழ்நாட்டிலோ விளையாட்டாக விளையாட்டு ஆட்சிநடக்கிறது. அனைத்து விலைவாசிகளும் உயர்ந்து, வரிகளும் கூடுதலாகிவிட்டது. அதிமுக ஆட்சியில் வரிகள் உயர்த்தப்படாமல், விலைவாசிகள் உயராமல் கட்டுக்கோப்பில் வைக்கப்பட்டிருந்தது. திமுகஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் சிறப்பானஆட்சி எதுவென்று மக்களில் 10 பேரிடம் கேட்டால், இ.பி.எஸ். ஆட்சிதான்சிறப்பான ஆட்சி என்று 8 பேர் சொல்கிறார்கள். மக்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டனர்” என்றார்.