Advertisment

சொந்த ஊர் திரும்பும் மக்கள்; 5 கி.மீ. தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்

 People returning to their hometown; heavy traffic jam in Chengalpattu

வரும் 24 ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பொது இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் பெருவாரியாக செல்வதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Advertisment

தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் முதல் கூடுவாஞ்சேரி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று முதல் இதுவரை 2,43,299 பேர் சிறப்புப் பேருந்துகளில்பயணம் செய்ததாகவும், மேலும் 1,74,376 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் எனவும் தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Advertisment

traffic Chengalpattu diwali
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe