சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர் சுங்கச்சாவடி

People returning to Chennai; The stifling Paranur toll plaza

பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வருவதால் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றிருந்த நிலையில் இன்று காலையில் இருந்தே சென்னை நோக்கி மீண்டும் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை வேளையில் சென்னை ஒட்டியுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் அதிகமானது. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் என வரிசை கட்டி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe