பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள் தற்பொழுது சென்னை திரும்பி வருவதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் படை எடுத்தனர். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் தமிழக அரசு சார்பில் விழா கால சிறப்பாகக் கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் அனைவரும் சென்னை திரும்பி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊர்ந்து செல்லும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.