சிறுவன் சுஜித் மீட்கப்படவேண்டும் என்று உலகமெங்கும் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.கோயில்கள், பள்ளிவாசல்கள், சர்ச்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் சிறுவனை மீட்க புதுக்கோட்டை மாவட்டம்கொத்தமங்கலத்தில் இருந்து வீரமணி தலைமையிலான குழுவினர்சென்றனர். அவர்களின் மீட்பு முயற்சி கைகொடுக்காத நிலையில், மீண்டும் தற்போது வீரமணி குழுவினரை மீட்புப்பணிக்காக அழைத்திருந்தனர்.
இந்த தகவல் அறிந்து கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர்,பனைமரக்காதலர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் இணைந்து சுஜித்பத்திரமாக மீட்கப்பட வேண்டும், தங்கள் ஊரைச் சேர்ந்த வீரமணிகுழுவினரின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று முத்துமாரியம்மன்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்து விளக்கு ஏற்றி வழிபட்டனர். இந்தநிகழ்ச்சியில் குழந்தைகள் மனமுருகி சுஜித் மீண்டுவர வேண்டும் என வழிபட்டனர்.