people petition Ranipet District Collector to open Tasmac in their area

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளம் முள்ளுவாடி, மேட்டு முள்ளுவாடி, அரும்பாக்கம், குருந்தாங்கல்ஆகிய கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் முள்ளுவாடி ஊராட்சி பகுதியில் அரசு மதுபான கடையை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர் .

அந்த கோரிக்கை மனுவில்,கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு அறிவிப்பின் காரணமாக முள்ளுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை ஓரமிருந்த அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்து கலவையைஅடுத்த நெத்தம்பாக்கம் பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

people petition Ranipet District Collector to open Tasmac in their area

Advertisment

முள்ளுவாடி கிராம பகுதியில் இருந்து நெத்தம்பாக்கம் வரை ஆறு கிலோமீட்டர் தொலைவு சென்று எங்களால் மதுபான பாட்டில்களை வாங்க இயலவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் இப்பகுதியை சேர்ந்த சிலர், அரசு மதுபான பாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து ஒரு குவாட்டர் பாட்டில் மீது 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து புகார் சொன்னால் காவல் துறையினர் தடுத்து நிறுத்துவதில்லை.இதனால் எங்களுக்கு பெரு நஷ்டம். விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்யும் மது பிரியர்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுபான பாட்டில்களை வாங்கி வருவதால் தங்களது ஒரு நாள் வருமானம் அதிலேயே செலவாகி விடுகிறது. கள்ளச் சந்தையில் மது விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், தங்களது கிராம பகுதியில் அரசு மதுபான கடையை கொண்டுவர வேண்டுமென மதுபான பிரியர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.