people perform tarpan trichy srirangam

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறைகளில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

ஆடி அமாவாசை,தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பன் நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும்.

people perform tarpan trichy srirangam

Advertisment

அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பார்கள். காவிரி கரைகளில் உள்ள படித்துறைகளில் மிகவும் முக்கியமான திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துரையில் திருச்சி மட்டுமல்லாமல் கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் தர்ப்பணம் கொடுக்க வருவார்கள்.

அந்த வகையில் இன்று(28.7.2022) அதிகாலை 5 மணி முதலே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் கூடிய பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தேங்காய்,வாழைப்பழம், வாழை இலை, அகத்திக்கீரை உள்ளிட்ட பொருட்களுடன் தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மட்டுமல்லாமல் திருச்சி அண்ணா சிலை உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.