Advertisment

முதலமைச்சருக்கு பாசிமணி மாலை வழங்கி நன்றி கூறிய பழங்குடியினர்

Advertisment

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15/09/2022) விருதுநகர் விருந்தினர் மாளிகையில், நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்தித்து, நரிக்குறவர் இன மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசைத் தொடர்ந்து, வலியுறுத்தி பழங்குடியின தகுதிபெற்றுத் தந்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

அத்துடன், பாசிமணி மாலையையும் வழங்கினர். அப்போது, அவர்களுக்கு முதலமைச்சர் தேநீர் விருந்தளித்தார். இந்த நிகழ்வின் போது, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப., வருவாய்த்துறை அலுவலர், நரிக்குறவர் சங்கத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tamilnadu chief minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe