Advertisment

சுஜித் மரணம்.. கொளப்பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலி...

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கி இந்தியாவின் ஒட்டு மொத்த அரசு இயந்திரங்களும் 80 மணி போராடியும் மீட்க முடியாமல் பாழடைந்த ஆழ்குழாய்க்குள்ளேயே மரணித்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

people mourning for sujith

சிறுவன் இறப்பிற்காக தமிழ்நாடு முழுவதும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய மக்கள்,மீண்டும் ஒரு சம்பவம் இப்படி நடக்க கூடாது என்றனர்.

Advertisment

அதே போல நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி ஊர் பொது மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், என்றும் அன்புடன் பறவைகள் சங்கம் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து நூற்றுக்கணக்கான மக்கள் கொளப்பள்ளி நகரில் ஊர்வலமாக சென்றுஆழ்த்துளைகிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து மரணிக்கும் கடைசி மரணம், சுஜித் மரணமாக இருக்க வேண்டும். இதன் பிறகு இப்படி ஒரு நிகழ்வு எங்கேயும் நடக்க கூடாது என்றனர். மேலும் கிராமங்களில் மூடப்படாமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை மக்களே பாதுகாப்பாக மூடவும் மழை நீர் சேமிப்பிற்காக பயன்படுத்தவும் செய்ய முன்வரவேண்டும் என்றனர்.

surjith
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe