The people of Madurai are happy as the ground water level is rising.

தேனி கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதன் காரணமாக சோத்துப்பாறை அணை நிரம்பி வருகிறது.இந்நிலையில் வராக நதி வழியாக வைகை ஆற்றுக்குத் தண்ணீர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால்,வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், வைகை ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், குளிப்பது, கால்நடைகளை ஆற்றில் மேய்ச்சலுக்கு விடுவது போன்றவை கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் வைகை ஆற்றின் தரைப் பாலங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல,வைகை ஆற்றில் தண்ணீர் வரும்போது வண்டியூர் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதால் வண்டியூர் தெப்பம் தற்போது நிறைந்து வருகிறது. தெப்பத்தில் தண்ணீர் எப்போதும் இருக்கும் நிலையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment