Advertisment

'எடப்பாடி பழனிசாமியின் தவறுகள் மக்களுக்கு நன்றாக தெரியும்' - டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி!

 'People know the mistakes of Edappadi Palanichamy' - TKS Ilangovan interview!

2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க சார்பில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் வேட்பாளராகஅ.தி.மு.க தலைமை இன்று அறிவித்திருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்தவறுகள்மக்களுக்கு நன்றாகத் தெரியும் என தி.மு.கவின்டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், எடப்பாடி பழனிசாமியுடைய தவறுகள் மக்களுக்கு மிக நன்றாகத் தெரிந்து இருக்கின்றன. இவருடைய தமிழர் விரோதப் போக்கு, தமிழ்மொழி விரோதப் போக்கு, மத்திய அரசை துணிச்சலாக எதிர்த்துப் பேசி மாநில உரிமைகளைப் பெறுவதற்கான கையாலாகாத தன்மை ஆகியவை மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இவர் பெயரை அறிவிப்பதன் மூலம் மக்களுக்கு, இவர் முதலமைச்சராக தகுதியற்றவர் என்பது நன்றாகத் தெரியும் என்றார்.

Advertisment

admk tks ilangovan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe